

சென்னை,
மத்திய இணை மந்திரி எல்.முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-
பாரத பிரதமர் நரேந்திர மோடியின் சீரிய தலைமையும் ராஜதந்திர நடவடிக்கையும் மேற்காசிய நெருக்கடியில் இருந்து பாரத திருநாடு பாதிக்கப்படாமல் காத்துள்ளது.
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு விதிக்கப்படும் கலால் வரி லிட்டருக்கு ரூ.10 வீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெட்ரோலிய பொருட்களின் விலை தடுக்கப்பட்டுள்ளது.
பாரத பிரதமர் நரேந்திர மோடி எப்போதும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தங்கு தடையின்றி கிடைப்பதையும் விலைவாசியை கட்டுக்குள் வைப்பதையும் உறுதி செய்து வருகிறார்.
அதுபோலவே டீசல் ஏற்றுமதிக்கு லிட்டருக்கு ரூ.21.5 மற்றும் விமான எரிபொருள் (ATF) ஏற்றுமதிக்கு லிட்டருக்கு ரூ.29.5 வீதம் சுங்கவரி விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெட்ரோலிய பொருட்கள் ஏற்றுமதியை கட்டுப்படுத்தி போதுமான அளவில் உள்நாட்டில் கிடைப்பது உறுதி செய்யப்படும்.
இதற்காக பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மத்திய நிதி மந்திரி அம்மா நிர்மலா சீதாரானுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.