அரசு நிலத்தை அளக்க சென்ற அதிகாரிகளை தடுத்த பெண்ணால் பரபரப்பு

வேப்பனப்பள்ளி அருகே அரசு நிலத்தை அளக்க சென்ற அதிகாரிகளை தடுத்த பெண்ணால் பரபரப்பு/
அரசு நிலத்தை அளக்க சென்ற அதிகாரிகளை தடுத்த பெண்ணால் பரபரப்பு
Published on

வேப்பனப்பள்ளி:

வேப்பனப்பள்ளி அருகே சின்ன மணவரனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த பஜப்பா கவுடு என்பவரின் 2 ஏக்கர் நிலத்தை நில உச்சவரம்பு சட்டத்தின் உத்தரவின்பேரில் அரசு கையகப்படுத்தியது. பின்னர் நில உரிமையாளர் சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் 2 ஏக்கர் நிலம் அரசுக்கு சொந்தம் எனவும், ஆதிதிராவிடர் நலத்துறை நிலத்தை கையப்படுத்த ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்பேரில் நேற்று ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் பத்மலதா முன்னிலையில் ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் குணசிவா, கிருஷ்ணகிரி உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழரசி தலைமையில் போலீசார் மற்றும் அதிகாரிகள் அப்பகுதிக்கு சென்று நிலத்தை அளவிட்டு கையகப்படுத்தும் பணியை மேற்கொண்டனர்.

அப்போது நிலத்திற்கு உரிமைகோரி பஜப்பா கவுடுவின் பேத்தி சோனியா (வயது 30) என்பவர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அதிகாரிகளின் பேச்சுவார்த்தைக்கு ஒத்துழைக்காமல் நிலம் அளவிடு பணியை தடுக்க முயன்றார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் சோனியாவை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து அதிகாரிகள் சின்ன மணவரனப்பள்ளி கிராமத்துக்கு சென்று நிலத்தை அளவீடு செய்யும் பணியை மேற்கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com