வேடசந்தூரில் பயங்கர சத்தத்துடன் பறந்த குட்டி விமானத்தால் பரபரப்பு

வேடசந்தூரில் பயங்கர சத்தத்துடன் பறந்த குட்டி விமானத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

வேடசந்தூரில் நேற்று காலை 10.15 மணி அளவில் குட்டி விமானம் ஒன்று பறந்தது. இந்த விமானம் மிகவும் தாழ்வான உயரத்தில் பறந்ததுடன் வேடசந்தூர் பகுதியை வட்டமடித்தபடி இருந்தது. விமானம் தாழ்வாக பறந்ததால் அந்த பகுதி முழுவதும் பயங்கர சத்தம் கேட்டது.

இதனால் அப்பகுதிகளை சேர்ந்தவர்கள் அசம்பாவிதம் ஏதும் நடந்துவிட்டதோ? என்று நினைத்து பதறியடித்தபடி வீடுகளை விட்டு வெளியே ஓடி வந்து பார்த்தனர். அப்போது குட்டி விமானம் தாழ்வாக வட்டமடித்ததால் தான் பயங்கர சத்தம் கேட்டுள்ளது என்பதை அறிந்ததும் நிம்மதி பெருமூச்சுவிட்டனர். சிறிது நேரம் அப்பகுதியில் பறந்த குட்டி விமானம் பின்னர் அங்கிருந்து சென்றுவிட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com