காரிமங்கலம் அரசு மகளிர் கல்லூரியில்சிறுதானிய கண்காட்சி

காரிமங்கலம் அரசு மகளிர் கல்லூரியில்சிறுதானிய கண்காட்சி
Published on

காரிமங்கலம்

காரிமங்கலம் அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறுதானிய கண்காட்சி மற்றும் உணவுப்பொருட்களின் பயன்பாடுகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கல்லூரி முதல்வர் கீதா தலைமை தாங்கினார். இதில் ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டு துறை தலைவர் செந்தில்குமார், உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் ஆகியோர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டு துறையை சேர்ந்த மாணவிகள் சிறு தானியங்கள் மற்றும் சிறுதானியங்களால் செய்த உணவு வகைகளை காட்சிப்படுத்தினர். இதை மாணவிகள் பார்வையிட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டு கவுரவ விரிவுரையாளர்கள் பிரியா, விஜயலட்சுமி, மதுவந்தி மற்றும் கல்லூரி மாணவிகள் ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com