தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி

அ.மல்லாபுரத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடந்தது.
தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
Published on

தர்மபுரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் பாலக்கோடு ஒன்றியம் அ.மல்லாபுரத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இதில் தமிழக அரசின் சார்பில் நிறைவேற்றப்படும் திட்டங்கள் குறித்த புகைப்படங்கள், முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் பல்வேறு திட்டப்பணிகள் தொடக்க விழா புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாக்களில் அமைச்சர்கள், கலெக்டர் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்ற புகைப்படங்கள் காட்சிக்காக வைக்கப்பட்டு இருந்தது. இதனை பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com