செய்து கற்றல் திறன் கண்காட்சி

சீக்கராஜபுரம் ரிஷி பள்ளியில் செய்து கற்றல் திறன் கண்காட்சி நடைபெற்றது.
செய்து கற்றல் திறன் கண்காட்சி
Published on

ராணிப்பேட்டை மாவட்டம் பெல் அடுத்த சீக்கராஜபுரத்தில் உள்ள ரிஷி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மழலையர் குழந்தைகளின் செய்து கற்றல் திறன் கண்காட்சி நடைபெற்றது. பள்ளி மழலையர்களின் செயல் திட்டத்தை மழலையர் மொழியில் அனைவருக்கும் விளங்கும் வகையில் கண்காட்சியில் விளக்கம் அளிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் முதல்வர் ஆர்.ராஜேந்திரன் வரவேற்புரை ஆற்றினார். பள்ளியின் தாளாளர் டாக்டர் எம்.புகழேந்தி, பள்ளியின் செயலாளர் இ.கே.கார்த்திக் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கண்காட்சியில் பங்கேற்ற அனைத்து மழலையர்களையும் பாராட்டி பரிசுகளை வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் நிர்வாக அலுவலர் ஜி.ஏகாம்பரம் மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள், பெற்றோர்கள், குழந்தைகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் துணை முதல்வர் எஸ்.மல்லீஸ்வரி நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com