

தூத்துக்குடி சிவந்தாகுளம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் இன்று நடைபெற்ற விழாவில் கனிமொழி எம்.பி., சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் முன்னிலையில் பல்வேறு திட்டப்பணிகளைத் திறந்து வைத்தார்.
செல்சீனிகாலனி மற்றும் திரவியரத்தினநகர் ஆகிய பகுதிகளுக்கான புதிய நியாயவிலைக் கடைகள் மக்கள் பயன்பாட்டிற்குத் திறந்து வைக்கப்பட்டன. என்.எல்.சி. தமிழ்நாடு பவர் லிமிடெட் (NTPL) நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியின் கீழ், ரூ.94.57 லட்சம் மதிப்பீட்டில் தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் கட்டப்பட்டுள்ள அதிநவீன கழிப்பறை கட்டிடம் திறந்து வைக்கப்பட்டது.
தொடர்ந்து தூத்துக்குடி மாநகராட்சி, 35வது வார்டு தேவகிநகர் சிறுவர் விளையாட்டு பூங்காவினை மாற்றுத்திறனாளிகள் பூங்காவாக மாற்றுவது தொடர்பாக தூத்துக்குடி எம்பி. கனிமொழி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாநகராட்சி, வி.வி.டி. சாலை- பண்டுகரை சாலை சந்திப்பு (4-ம் ரெயில்வே கேட் ஓடை பாலம் அருகில்) பக்கிள் ஓடை விரிவாக்கப் பணிக்கான அடிக்கல் நாட்டி பணியினை துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்வின்போது தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் இளம்பகவத், மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி கமிஷனர் பிரியங்கா ஆகியோர் உடனிருந்தனர்.