அறநிலையத்துறைக்கு தேவையான செலவுகளை கோவில் நிதியில் இருந்து மேற்கொள்ள முடியாது - சென்னை ஐகோர்ட்டு

அறநிலையத்துறைக்கு தேவையான செலவுகளை கோவில் நிதியில் இருந்து மேற்கொள்ள முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
அறநிலையத்துறைக்கு தேவையான செலவுகளை கோவில் நிதியில் இருந்து மேற்கொள்ள முடியாது - சென்னை ஐகோர்ட்டு
Published on

சென்னை,

அறநிலையத்துறைக்கு தேவையான செலவுகளை கோவில் நிதியில் இருந்து மேற்கொள்ள முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, ரமேஷ் என்பவர் தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, அறநிலையத்துறை அலுவலகங்களில் கட்டுமானப் பணிகள் மேற்கெள்ளவும், முந்தைய ஆட்சியில் அமைச்சருக்கு வாகனங்கள் வாங்குவதற்கும், கணினிமயமாக்கவும், மண்டபங்கள், பக்தர்கள் தங்கும் விடுதிகள் கட்டவும் கோவில் நிதி பயன்படுத்தப்பட்டதாக மனுதாரர் தரப்பு தெரிவித்தது.

கேவில்களை நிர்வகிப்பதற்காக, மெத்த வருமானத்தில் 12 சதவீதம் வழங்கப்படுவதாகவும் மனுதாரர் தரப்பு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து, அறநிலையத்துறைக்கு தேவையான செலவுகளை கோவில் நிதியில் இருந்து மேற்கொள்ள முடியாது என்று கூறிய நீதிபதிகள், அடுத்த விசாரணையை பிப்ரவரி 8-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com