விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் திருட்டு

காட்பாடியில் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடிச்சென்று விட்டனர்.
விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் திருட்டு
Published on

காட்பாடி தாராபடவேடு இளங்கோதெருவை சேர்ந்தவர் விக்னேஷ்குமார். தனியார் நிறுவனம் ஒன்றில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த மோட்டார்சைக்கிளை நேற்று காலையில் பார்த்தபோது திருட்டு போயிருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது மூன்று வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது.

இது குறித்து விக்னேஷ்குமார் காட்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மோட்டார் சைக்கிளை திருடிசென்ற மூன்று வாலிபர்கள் தெரு நாய்கள் குறைக்காமல் இருக்க மயக்க முட்டைகளை வீசிவிட்டு மோட்டார் சைக்கிளை நூதன முறையில் திருடி சென்றுள்ளது தெரியவந்தது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com