பாஜக வேட்பாளர்கள் பட்டியலில் இம்முறை அனுபவம் வாய்ந்தவர்களுக்கு வாய்ப்பு - பியூஷ் கோயல்

அண்ணாமலை தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
பாஜக வேட்பாளர்கள் பட்டியலில் இம்முறை அனுபவம் வாய்ந்தவர்களுக்கு வாய்ப்பு - பியூஷ் கோயல்
Published on

சென்னை,

பாஜக வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியானது. இது குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயல் கூறியதாவது;-

அனைத்து தரப்பு மக்களும் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர். பாஜக வேட்பாளர்கள் பட்டியலில் இம்முறை அனுபவம் வாய்ந்தவர்களுக்கு வாய்ப்பு தரப்பட்டுள்ளது. அனைத்து வேட்பாளர்களும் நிச்சயம் வெற்றி பெறுவர். அமையவுள்ள எடப்பாடி பழனிசாமியின் அரசு அனைவருக்குமான அரசாக இருக்கும்.

அண்ணாமலை தமிழ்நாடு முழுக்க தேர்தல் பணியாற்ற விரும்புகிறார். கட்சியினரின் உணர்வு, வேட்பாளரின் விருப்பத்தின் பேரிலேயே வாய்ப்பு தரப்படுகிறது. அர்ப்பணிப்புடன் கூடிய செயல்வீரரான அண்ணாமலை தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com