குன்னம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் தீத்தடுப்பு செயல் விளக்கம்

குன்னம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் தீத்தடுப்பு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
குன்னம் அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் தீத்தடுப்பு செயல் விளக்கம்
Published on

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி தீயணைப்பு மற்றும் மீட்டு பணிகள் துறையின் சார்பில் தீத்தடுப்பு செயல் விளக்கம் மற்றும் பேரிடர் கால ஒத்திகை பயிற்சி, வெள்ள தடுப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி வேப்பூர் தீயணைப்பு நிலையம் சார்பில் குன்னம் அரசு மகளிர் மேல்நிலை பள்ளியில் மாணவிகள் முன்பு தீத்தடுப்பு செயல் விளக்கம் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) கரிகாலன் முன்னிலையில் நடந்தது. பள்ளி உதவி தலைமையாசிரியர் வையாபுரி மற்றும் ஆசிரியை, ஆசிரியர்கள் முன்னிலையில் தீத்தடுப்பு செயல்முறை விளக்கமும், தீத்தடுப்பு சாதனங்களை கையாளும் விதம் குறித்தும், குடியிருப்புகளிலும், பணிபுரியும் இடங்களிலும் தீ விபத்து ஏற்பட்டால் அதை எவ்வாறு கையாளுவது, பாதுகாப்பாக வெளியேறுவது குறித்து வேப்பூர் தீயணைப்பு வீரர்கள் செயல் விளக்கத்துடன் செய்து காட்டினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com