சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடி விபத்து - ஒருவர் படுகாயம்

புலித்துறை என்பவர் பலத்தகாயங்களுடன் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
வெடி விபத்து
Published on: 

விருதுநகர்,

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

வெடி விபத்து

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள கங்கர்செவல்பட்டியில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இன்று திடீரென பட்டாசு ஆலையில் தீப்பிடித்து வெடித்து சிதறியது. இதில் ஒரு அறை முற்றிலும் தீப்பிடித்து சேதமடைந்தது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்பு அங்கு தீயை அணைக்க முற்பட்டனர்.

இதில், நாரணாபுரம் பகுதியை சேர்ந்த புலித்துறை என்பவர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தீ விபத்து குறித்து வெம்பக்கோட்டை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com