பூவுக்குள் மறைந்து இருந்த வெடி வெடித்து இருவர் காயம்

விவசாய நிலத்தில் வைக்கப்பட்ட பூண்டு வெடி, தவறுதலாக பூக்களுடன் கலந்திருக்கலாம் என போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
image: ai
image: ai
Published on

விழுப்புரம்

விழுப்புரம் அருகே மல்ராஜன்குப்பத்தை சேர்ந்த கல்லூரி மாணவி ஜீவா (வயது 18). இவர் நேற்றுமுன்தினம் வளவனூரில் உள்ள பூக்கடையில் மல்லிகைப்பூ மற்றும் அரும்பு வாங்கி வந்தார். வீட்டில் தாய் தனபாக்கியத்துடன் சேர்ந்து கட்டுவதற்காக உதிரி பூக்களை தரையில் போட்டார்.

பூண்டு வெடி

அப்போது, பூக்களுக்குள் வெடிபொருள் இருந்துள்ளது. தரையில் விழுந்ததில் அது பயங்கர சத்தத்துடன் வெடித்ததில் தாய், மகள் இருவருக்கும் காயம் ஏற்பட்டது. அவர்கள் மீட்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காட்டுப்பன்றிகளை விரட்ட விவசாய நிலத்தில் வைக்கப்பட்ட பூண்டு வெடி, தவறுதலாக பூக்களுடன் கலந்திருக்கலாம் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com