ஏற்றுமதி பாதிப்பு: தேங்காய் விலை 40 சதவீதம் சரிவு

கடந்த 2024-25ல் 43 லட்சம் டன் தேங்காய், தமிழகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது.
ஏற்றுமதி பாதிப்பு: தேங்காய் விலை 40 சதவீதம் சரிவு
Published on

சென்னை,

நாட்டின் மொத்த தேங்காய் ஏற்றுமதியில் தமிழகம் 31 சதவீதம் பங்குடன் முதல் இடத்தில் உள்ளது. தேங்காய் ஏற்றுமதியில் ஐ.சி.சி., என்றழைக்கப்படும் பஹ்ரைன் குவைத், கத்தார், சவுதி அரேபியா, ஏமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முக்கிய இடம் பிடித்துள்ளன. இதுதவிர சிங்கப்பூரும் அதிக இறக்குமதி செய்கிறது.

மேற்காசியாவில் போர் துவங்கியதிலிருந்து தமிழகத்திலிருந்து தேங்காய் ஏற்றுமதி செய்வது முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. கடந்த 2024-25ல் 43 லட்சம் டன் தேங்காய், தமிழகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. இதில் கிட்டத்தட்ட 40 சதவீதம் அளவுக்கு தேங்காய் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.

போர் துவங்குவதற்கு முன் தமிழகத்தில் ஒரு கிலோ தரமான தேங்காய் 62 ரூபாய்க்கு விற்பனையான நிலையில் தற்போது 52 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதனால் உள்ளூரிலும் தேங்காய் விலை குறைந்துள்ளது. எனவே, ஏற்றுமதியாளர்களுக்கு அரசு உதவ வேண்டும் என ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com