ரெயில் நிலைய நடைமேடை நீளத்தை அதிகரிக்க வேண்டும்

அதிராம்பட்டினத்தில் ரெயில் நிலைய நடைமேடை நீளத்தை அதிகரிக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ரெயில் நிலைய நடைமேடை நீளத்தை அதிகரிக்க வேண்டும்
Published on

அதிராம்பட்டினம்;

மயிலாடுதுறை- காரைக்குடி ரெயில் பாதையில் அதிராம்பட்டினம் ரெயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரெயில் நிலையத்தின் நடைமேடை 480 மீட்டர் நீளம் கொண்டது. இந்த நடைமேடையில் 21 ரெயில் பெட்டிகளை கொண்ட விரைவு ரெயில்கள் வரும்போது சில பெட்டிகள் நடைமேடைக்கு வெளியே நிற்கிறது.இதனால் பயணிகள் ஏற இறங்க சிரமமாக உள்ளது. தற்போது செகந்தராபாத்திலிருந்து ராமநாதபுரம் செல்லும் விரைவு ரெயில் சில வாரங்களாக கால தாமதமாக அதிராம்பட்டினத்துக்கு இரவு நேரத்தில் வருகிறது.

சென்னையில் இருந்து இந்த ரெயில் அதிராம்பட்டினத்திற்கு வரும்போது குளிர் சாதன வசதி உள்ள இரயில் பெட்டிகள் நடைமேடையை விட்டு இருளான புதர்கள் அடங்கிய பகுதியில் நிற்கிறது. இதனால் பயணிகள் இரவு நேரத்தில் முட்புதர்கள் அடர்ந்த இடத்தில் இறங்க வேண்டியுள்ளது.

வருங்காலத்தில் இந்த ரெயில் தடத்தில் அதிக ரெயில்கள் இயக்கப்படும் வாய்ப்பு உள்ளதால் 24 ரெயில் பெட்டிகள் நடைமேடை பகுதியிலேயே நிற்கும் அளவிற்கு தென்னக ரெயில்வே நிர்வாகம் அதிராம்பட்டினம் ரெயில் நிலைய நடை மேடைகளை நீட்டித்து தர வேண்டும் என அதிராம்பட்டினம் மற்றும் அதை சுற்றியுள்ள ரெயில் பயணிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com