தொடர் விடுமுறை: விதி மீறலில் ஈடுபட்ட 391 ஆம்னி பஸ்களுக்கு அபராதம்

கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தொடர் விடுமுறை: விதி மீறலில் ஈடுபட்ட 391 ஆம்னி பஸ்களுக்கு அபராதம்
Published on: 

சென்னை,

ஆயுதபூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோன்று, வரி கட்டாமை உள்ளிட்ட விதிமீறல்களுக்காகவும் ஆம்னி பஸ்கள் மீது தமிழ்நாடு முழுவதும் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அடங்கிய குழுக்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நேற்று 2-வது நாளாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்போது தமிழகம் முழுவதும் 1,970 பஸ்களில் தணிக்கை மேற்கொள்ளப்பட்டு விதி மீறல்களில் ஈடுபட்ட 391 பஸ்களுக்கு ரூ.3 லட்சத்து 15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வரித் தொகையாக ரூ.37 லட்சத்து 99 ஆயிரத்து 341 வசூலிக்கப்பட்டுள்ளது.

இது தவிர அதிக கட்டணம் வசூலித்தல் மற்றும் பிற குற்றங்களுக்காக 3 ஆம்னி பஸ்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளன. இதேபோன்று நேற்று முன்தினம் நடைபெற்ற வாகன சோதனையில் 207 ஆம்னி பஸ்களுக்கு ரூ.4 லட்சத்து 18 ஆயிரத்து 700 அபராதம் விதிக்கப்பட்டு 'இ-சலான்' வழங்கப்பட்டுள்ளது. மேலும், 4 பஸ்கள் சிறைபிடிக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com