அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்கோவில் வரை நீட்டிப்பு பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்

அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்கோவில் வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்கோவில் வரை நீட்டிப்பு பொன்.ராதாகிருஷ்ணன் தகவல்
Published on

நாகர்கோவில்,

மத்திய நிதி மற்றும் கப்பல் துறை இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய ரெயில்வே துறை மந்திரி பியூஷ்கோயலை சந்தித்து தாம்பரம்- நெல்லை, நெல்லை- தாம்பரம் தினசரி அந்தியோதயா எக்ஸ்பிரஸ் ரெயிலை நாகர்கோவில் வரை நீட்டிப்பு செய்ய கேட்டுக்கொண்டேன். அதன்பேரில் ரெயில்வே அமைச்சகம் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அந்த ரெயிலை நாகர்கோவில்வரை நீட்டிப்புசெய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த ரெயில் நாகர்கோவில் வரை நீட்டிப்பு செய்யப்படும்போது, நாகர்கோவிலில் இருந்து மாலை 3.50 மணிக்கு புறப்பட்டு நெல்லை, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, திருப்பாதிரிபுலியூர், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக மறுநாள் காலை 9.45 மணிக்கு தாம்பரத்தை சென்றடையும்.

மறுமார்க்கமாக தாம்பரத்தில் இருந்து இரவு 11 மணிக்கு புறப்பட்டு செங்கல்பட்டு, விழுப்புரம், திருப்பாதிரிபுலியூர், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை வழியாக மதியம் 2.45 மணிக்கு நாகர்கோவில் வந்தடையும். இதற்கான தொடக்க நிகழ்ச்சி விரைவில் நடைபெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com