போடி-தாம்பரம் சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு

மேலும் 4 வாரங்கள் நீட்டித்து தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
போடி-தாம்பரம் சிறப்பு ரெயில் சேவை  நீட்டிப்பு
Published on

தேனி,

தேனி மாவட்டம் போடியில் இருந்து சென்னைக்கு அதிகளவில் பொதுமக்கள் சென்றுவருவதால் கூடுதல் ரெயில்கள் இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதையடுத்து முதற்கட்டமாக கடந்த மே 23-ந்தேதி முதல் தாம்பரத்தில் இருந்து போடிக்கு சிறப்பு ரெயில் (06059/60) ஒவ்வொரு சனிக்கிழமையும் தாம்பரத்தில் இருந்து இரவு 10.30 மணிக்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் போடியில் இருந்து மாலை 4.45 மணிக்கு தாம்பரத்திற்கும் சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது.

இந்த ரெயில் 4 வாரங்களுக்கு மட்டும் இயக்கப்பட்டு வந்தது. சிறப்பு ரெயிலினால் பயணிகளிடம் அதிக வரவேற்பு உள்ளது என்றும் இதனால் சிறப்பு ரெயில் சேவையை நீட்டிக்க வேண்டும் எனவும் பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த நிலையில், சிறப்பு ரெயில் சேவை மேலும் 4 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டது. அதாவது வருகிற 26-ந்தேதி வரை ரெயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன் முன்பதிவு உடனடியாக தொடங்கியது.

X

Daily Thanthi
www.dailythanthi.com