அன்புஜோதி ஆசிரம வழக்கு:கைதான நிர்வாகி உள்பட 3 பேருக்கு மேலும் 15 நாட்கள் காவல் நீட்டிப்பு

அன்புஜோதி ஆசிரம வழக்கில் கைதான அதன் நிர்வாகி உள்பட 3 பேருக்கு மேலும் 15 நாட்கள் காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
அன்புஜோதி ஆசிரம வழக்கு:கைதான நிர்வாகி உள்பட 3 பேருக்கு மேலும் 15 நாட்கள் காவல் நீட்டிப்பு
Published on

அன்புஜோதி ஆசிரமம்

விழுப்புரத்தை அடுத்த குண்டலப்புலியூரில் இயங்கி வந்த அன்புஜோதி ஆசிரமத்தில் பராமரிக்கப்பட்டு வந்த மனநலம் பாதிக்கப்பட்டோர், ஆதரவற்றோர் அடித்து துன்புறுத்தப்பட்டது, அங்கிருந்த பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது, ஆசிரமத்தில் இருந்த சிலர் மாயமான சம்பவம் தொடர்பாக ஆசிரம நிர்வாகி ஜூபின்பேபி, அவரது மனைவி மரியாஜூபின், மேலாளர் பிஜூமோன் மற்றும் ஆசிரம பணியாளர்கள் 6 பேர் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்கள், தங்களுக்கு ஜாமீன் வழங்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ள நிலையில் இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை. இந்நிலையில் இவ்வழக்கில் ஆசிரம நிர்வாகி ஜூபின்பேபி, அவரது மனைவி மரியாஜூபின், பணியாளர் சதீஷ் ஆகிய 3 பேரின் நீதிமன்ற காவல் நேற்று காலை 10.30 மணியுடன் முடிவடைந்தது.

3 பேருக்கு காவல் நீட்டிப்பு

இதையடுத்து ஜூபின்பேபி, மரியாஜூபின், சதீஷ் ஆகிய 3 பேரும் சிறையில் இருந்தவாறு வீடியோ கான்பரன்சிங் மூலம் விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதை தொடர்ந்து ஆசிரம நிர்வாகி ஜூபின்பேபி, அவரது மனைவி மரியா ஜூபின், பணியாளர் சதீஷ் ஆகிய 3 பேருக்கும் மேலும் 15 நாட்கள் அதாவது வருகிற 13-ந் தேதி வரை காவலை நீட்டித்து நீதிபதி புஷ்பராணி உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com