ரவுடி வரிச்சியூர் செல்வத்துக்கு காவல் நீட்டிப்பு

ரவுடி வரிச்சியூர் செல்வத்துக்கு காவல் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.
ரவுடி வரிச்சியூர் செல்வத்துக்கு காவல் நீட்டிப்பு
Published on

விருதுநகர் அல்லம்பட்டியை சேர்ந்தவர், செந்தில்குமார். இவர் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தின் கூட்டாளி ஆவார். இவர் சென்னையில் கொலை செய்யப்பட்டார். அவரது உடலை வாகனத்தில் எடுத்து வந்து துண்டுகளாக்கி தாமிரபரணி ஆற்றில் வீசினர். இந்த வழக்கில் பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வத்தை தனிப்படை போலீசார் கைது செய்து, காவலில் எடுத்து விசாரித்தனர். பின்னர் கடந்த 1-ந் தேதி விருதுநகர் கோர்ட்டில், முதலாவது மாஜிஸ்திரேட்டு கவிதா முன்பு வரிச்சியூர் செல்வத்தை ஆஜர்படுத்தினர். அப்போது மீண்டும் 5-ந் தேதி ஆஜர்படுத்துமாறு கோர்ட்டு உத்தரவிட்டது. அதன்படி நேற்று அவரை தனிப்படை போலீசார் அழைத்து வந்து ஆஜர்படுத்தினர். இதனைத்தொடர்ந்து வரிச்சியூர் செல்வத்திற்கு வருகிற 19-ந் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து மாஜிஸ்திரேட்டு கவிதா உத்தரவிட்டார். அதன்பேரில் தனிப்படை போலீசார் வரிச்சியூர் செல்வத்தை மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com