அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு

திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க இணையதளம் மூலம் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்து பயனடையலாம்.
மனைப்பிரிவு
Published on

சென்னை,

சமதளப் பகுதிகளில் 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்பு பதிவு செய்யப்பட்ட மனைப்பிரிவுகளில் உள்ள விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத மனைகள், மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்துவதற்கான விண்ணப்ப காலக்கெடு 2027 ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

திட்டம்

இதுதொடர்பாக, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அரசாணை (நிலை) எண்.148, நாள் 27.07.2026 மூலம் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. முன்னதாக, இந்த வரன்முறைப்படுத்தும் திட்டம் அரசாணை (நிலை) எண்.78, நாள் 04.05.2017 மூலம் அறிமுகப்படுத்தப்பட்டது.

எனவே, இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க https://tcponline.tn.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் தங்களது விண்ணப்பங்களை பதிவு செய்து பயனடையலாம். ஆகையால், பொதுமக்கள் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி, சமதளப் பகுதிகளில் அமைந்துள்ள அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com