ஈரோடு - நெல்லை தினசரி விரைவு ரெயில் சேவை செங்கோட்டை வரை நீட்டிப்பு

ஈரோடு- நெல்லை விரைவு ரெயிலை செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
ஈரோடு - நெல்லை தினசரி விரைவு ரெயில் சேவை செங்கோட்டை வரை நீட்டிப்பு
Published on

நெல்லை,

நெல்லை செங்கோட்டை வழித்தடத்தில் கடந்த சில ஆண்டுகளாக பாசஞ்சர் ரெயில்கள் மட்டுமே இயக்கப்பட்ட நிலையில், தற்போது பாலருவி தினசரி ரெயிலும், தாம்பரம், மேட்டுப்பாளையம் வாரம் ஒருமுறை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும் இயக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில், ஈரோடு- நெல்லை விரைவு ரெயிலை செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில் ஈரோடு-நெல்லை விரைவு ரெயில் (16845) சேவையை செங்கோட்டை வரை நீட்டிக்க ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, ஈரோட்டில் இருந்து மதியம் 2 மணிக்கு புறப்படும் ரெயில், இரவு 11.15 மணிக்கு செங்கோட்டையை சென்றடையும். செங்கோட்டையில் இருந்து காலை 4.50 மணிக்கு புறப்படும் ரெயில் (16846) ஈரோட்டை மதியம் 3 மணிக்கு சென்றடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com