சம்பா நெற்பயிர் காப்பீட்டுக்கான கால வரம்பு 30-ந்தேதி வரை நீட்டிப்பு - தமிழக அரசு தகவல்

சம்பா நெற்பயிர் காப்பீட்டுக்காக ஏற்கனவே பதிவு செய்த விவசாயிகள் மீண்டும் பதிவு செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சம்பா நெற்பயிர் காப்பீட்டுக்கான கால வரம்பு 30-ந்தேதி வரை நீட்டிப்பு - தமிழக அரசு தகவல்
Published on

சென்னை,

சம்பா, தாளடி, பிசானம் நெற்பயிர்க் காப்பீட்டுக்கான கடைசி தேதியை நீட்டிக்க வேண்டும் என்ற விவசாயிகள் கோரிக்கையை ஏற்று, விடுபட்ட விவசாயிகளும் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன், தமிழ்நாடு அரசால் எடுக்கப்பட்ட தொடர்முயற்சியால் சம்பா, தாளடி, பிசானம் நெற்பயிர்க் காப்பீட்டுக்கான கடைசி தேதியை வருகிற 30-ந்தேதி வரை நீட்டித்து மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

எனவே, வருகிற 23, 24-ந்தேதிகளில் (சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில்) பொது சேவை மையங்கள் செயல்படுவதால் அரியலூர், செங்கல்பட்டு, கடலூர், தர்மபுரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, காஞ்சீபுரம், கரூர், மதுரை, மயிலாடுதுறை, நாகை, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, சேலம், சிவகங்கை, தஞ்சை, தேனி, திருச்சி, திருப்பத்தூர், திருப்பூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் வருகிற 30-ந்தேதிக்குள் இதுவரை சம்பா நெற்பயிரை காப்பீடு செய்யாத விவசாயிகள் உரிய ஆவணங்களுடன் பதிவு செய்து பயனடையலாம். நிர்ணயம் செய்யப்பட்ட காலக்கெடுவுக்குள் ஏற்கனவே பதிவு செய்த விவசாயிகள் மீண்டும் பதிவு செய்ய வேண்டாம். மேற்கண்ட தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com