சேலம் வழியாக இயக்கப்படும் ஹூப்ளி-கொல்லம் சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு

ரெயில் சேவையை பயணிகள் பயன்படுத்தி கொள்ளுமாறு தெற்கு ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சேலம் வழியாக இயக்கப்படும் ஹூப்ளி-கொல்லம் சிறப்பு ரெயில் சேவை நீட்டிப்பு
Published on

சேலம்,

சேலம் வழியாக இயக்கப்படும் ஹூப்ளி-கொல்லம் சிறப்பு ரெயில் சேவை நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு ரெயில் நீட்டிப்பு

கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து கேரளம் மாநிலம் கொல்லத்திற்கு சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்-07313) இயக்கப்பட்டு வருகிறது. அதேபோல் மறுமார்க்கத்தில் கொல்லம்-ஹூப்ளி சிறப்பு ரெயில் (வண்டி எண்-07314) இயக்கப்படுகிறது.

இந்த ரெயில் இயக்கத்தின் சேவை இந்த மாதத்தோடு முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது மேலும் 2 மாதம் அதாவது அக்டோபர் மற்றும் நவம்பர் மாதம் வரையிலும் நீட்டித்து தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

அதன்படி, ஹூப்ளி-கொல்லம் சிறப்பு ரெயில் (வண்டி எண்-07313) அக் டோபர் 4-ந் தேதி முதல் நவம்பர் மாதம் 29-ந் தேதி வரை ஞாயிற்றுக்கி ழமை தோறும் (9 சேவை) நீட்டித்து இயக்கப்படுகின்றன. ஹூப்ளியில் பிற்பகல் 3.15 மணிக்கு புறப்பட்டு ஹாவேரி, பீரூர், தும்கூரு, பெங்களுரு. கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை வழியாக சேலத்திற்கு மறுநாள் அதி காலை 3.07 மணிக்கு வரும். அதன்பிறகு ஈரோடு. திருப்பூர், போத்தனூர், பாலக்காடு, திருச்சூர், ஆலுவா, எர்ணாகுளம் டவுன், கோட்டயம் வழியாக கொல்லத்திற்கு மதியம் 1.15 மணிக்கு சென்றடைகிறது.

கொல்லம்-ஹூப்ளி

அதேபோல் மறுமார்க்கத்தில் கொல்லம்-ஹூப்ளி சிறப்பு ரெயில் (07314) வருகிற அக்டோபர் மாதம் 5-ந் தேதி முதல் நவம்பர் மாதம் 30-ந் தேதி வரை திங்கட்கிழமை தோறும் (9 சேவை) இயக்கப்படுகிறது. இந்த ரெயில் கொல்லத்தில் மாலை 5 மணிக்கு புறப்பட்டு பாலக்காடு, போத்த னூர் வழியாக சேலத்திற்கு மறுநாள் அதிகாலை 4.05 மணிக்கும் வந்தடையும்.

இதையடுத்து சேலத்தில் இருந்து புறப்படும் இந்த ரெயில், பங்காரு பேட்டை, பெங்களூரு வழியாக ஹூப்ளிக்கு மாலை 6.30 மணிக்கு சென்றடைகிறது. இந்த ரெயில் சேவையை பயணிகள் பயன்படுத்தி கொள்ளுமாறு தெற்கு ரெயில்வே நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com