மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டத்தில் விண்ணப்பிக்க கால நீட்டிப்பு

மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டத்தில் விண்ணப்பிக்க கால நீட்டிக்கப்பட்டுள்ளதாக வீட்டு வசதி துறை தெரிவித்துள்ளது.
மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டத்தில் விண்ணப்பிக்க கால நீட்டிப்பு
Published on

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: அனுமதியற்ற மனைப்பிரிவு மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட மனைப்பிரிவில் விற்கப்பட்ட மற்றும் விற்கப்படாத அனைத்து மனை மற்றும் மனைப்பிரிவுகளை அவசியம் வரன்முறைப்படுத்த வேண்டும். இதற்காக ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணைகளில் குறிப்பிடப்பட்ட 2017-ம் ஆண்டு விதிகளுக்கு உட்பட்டு எவ்வித மாற்றமும் இல்லாமல் 29.2.2024 வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்து 4.9.2023 அன்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அரசாணை எண்.118 மூலம் உத்தரவிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnlayoutreg.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் பதிவு செய்யலாம். இதன்மூலம் அனுமதியற்ற மனைப்பிரிவுகள் மற்றும் மனைகளை வரன்முறைப்படுத்தி கொள்ளாதவர்கள் இக்கால நீட்டிப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com