டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
டான்செட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
Published on

சென்னை,

அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் 2023-ம் ஆண்டுக்கான டான்செட் தேர்வு மார்ச் 25-ம் தேதி நடைபெற உள்ளது. அன்று காலையில் எம்சிஏ படிப்புக்கும், மதியம் எம்பிஏ படிப்புக்கும் தேர்வு நடத்தப்பட உள்ளது.

இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படும், முதுநிலை பட்டப்படிப்புக்கான டான்செட் (TANCET) தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 28.02.2023 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களுக்கான ஹால் டிக்கெட் மார்ச் 11ஆம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com