தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

தனியார் பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் பொருளாதாரத்தில் நலிந்த ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளை கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் சேர்க்கலாம். இந்த திட்டத்தின் கீழ் சேரக்கூடிய குழந்தைகளுக்கு எல்.கே.ஜி. முதல் 8ம் வகுப்பு வரை இலவசம். அதன்படி வரும் 2022-2023 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக் கான ஆன்லைன் பதிவு நடைபெற்று வருகிறது.

மொத்தம் உள்ள ஒரு லட்சத்தி முப்பதாயிரம் இடங்களுக்கு , நேற்று வரை ஒரு லட்சத்து 15 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருக்கின்றனர் . விண்ணப்பம் செய்வதற்கு நாளை கடைசி நாள் நாளை என்று ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் , வரும் 25-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டிருப்பதாக மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com