அங்கீகாரமில்லாத மனைகளை வரன்முறைப்படுத்த கால அவகாசம் நீட்டிப்பு: தமிழக அரசு

அங்கீகாரமில்லாத மனைகளை வரன்முறைப்படுத்த கால அவகாசம் நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் 20.10.2016-க்கு முன்பு பத்திரப்பதிவு செய்யப்பட்ட அங்கீகாரமில்லாத மனைகளை வரன்முறைப்படுத்துவதற்கு விண்ணப்பிக்க வருகிற 30-ந் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது இந்த கால அவகாசம் நவம்பர் 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புபவர்களும், மலையிட பகுதிகளில் உள்ள அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளை வரன்முறை செய்வதற்கும் www.tcponline.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story