

சேலம்,
கோடை விடுமுறையையொட்டி கர்நாடகா மாநிலம் உப்பள்ளியில் இருந்து சேலம் வழியாக கேரளம் மாநிலம் கொல்லத்திற்கு வாராந்திர சிறப்பு ரெயில் (07313) இயக்கப்பட்டு வருகிறது. தற்போது அந்த ரெயில் சேவை ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி உப்பள்ளி-கொல்லம் வாராந்திர சிறப்பு ரெயில் வருகிற 31, ஜூன் 14, 21 ஆகிய தேதிகளில் ஞாயிற்றுக்கிழமை தோறும் உப்பள்ளியில் இருந்து மதியம் 3.15 மணிக்கு புறப்பட்டு பெங்களூரு, கிருஷ்ணராஜபுரம், பங்காருபேட்டை வழியாக மறுநாள் அதிகாலை 3.07 மணிக்கு சேலம் வந்தடையும்.
இங்கிருந்து 3.10 மணிக்கு புறப்பட்டு ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக மதியம் 1.15 மணிக்கு கொல்லம் சென்றடையும். மறுமார்க்கத்தில் கொல்லம்-உப்பள்ளி வாராந்திர சிறப்பு ரெயில் (07314) ஜூன் 1, 15, 22 ஆகிய தேதிகளில் திங்கட்கிழமை தோறும் மாலை 5 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டு போத்தனூர், திருப்பூர், ஈரோடு வழியாக மறுநாள் காலை 4.05 மணிக்கு சேலம் வந்தடையும். இங்கிருந்து 4.08 மணிக்கு புறப்பட்டு பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம், பெங்களூரு வழியாக மாலை 6.30 மணிக்கு உப்பள் ளியை சென்றடையும்.