விஷ வண்டுகள் அழிப்பு

எஸ்.புதூர் அருகே விஷ வண்டுகள் அழிக்கப்பட்டன.
விஷ வண்டுகள் அழிப்பு
Published on

எஸ்.புதூர்

எஸ்.புதூர் அருகே திருவாழ்ந்தூர் கிராமத்தில் பனையன் என்பவரது வீட்டின் பின்புறம் உள்ள தென்னை மரத்தில் கதம்பவண்டு கூடு கட்டி இருந்தது. இது அவ்வப்போது பறந்து அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வருவதாக சிங்கம்புணரி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்திற்கு தகவல் வந்தது. அதன்பேரில் சிங்கம்புணரி தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலைய அலுவலர் பிரகாஷ் தலைமையிலான வீரர்கள் மரத்தின் மீது ஏறி தீப்பந்தத்தால் கதம்பவண்டுகளை அழித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com