

ஆவுடையார்கோவில் அருகே கருப்பூர் கிராமத்தில் சாலையோர பனைமரத்தில் விஷவண்டுகள் கூடுக்கட்டி உள்ளன. மேலும் அந்த வழியாக செல்லும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆவுடையார்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலர் அப்துல்ரஹ்மான் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் தீப்பந்தம் மூலம் விஷ வண்டுகளை அழித்தனர். இதனால் கருப்பூர் கிராமமக்கள் நிம்மதி அடைந்தனர்.