விஷவண்டுகள் அழிப்பு

ராதாமங்கலம் ஊராட்சியில் விஷவண்டுகள் அழிக்கப்பட்டது.
விஷவண்டுகள் அழிப்பு
Published on

சிக்கல்:

கீழ்வேளூர் ஒன்றியம் ராதாமங்கலம் ஊராட்சி தெற்காலத்தூர் மெயின் சாலை, ராதாமங்கலம் நடுத்தெரு பகுதியில் உள்ள 3 பனை மரங்களில் விஷவண்டுகள் கூடு கட்டி இருந்தது.இந்த விஷவண்டுகள் அந்த பகுதியில் செல்பவர்களை அச்சுறுத்தி வந்தது.இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் ஜீவா கீழ்வேளூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் கீழ்வேளூர் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு சென்று மரங்களில் கூடு கட்டியிருந்த விஷ வண்டுகளை தீவைத்து அழித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com