ஓசூரில் துணிகரம்: தனியார் நிறுவன ஊழியர்களை கத்தி முனையில் மிரட்டி பணம், செல்போன் கொள்ளை

ஓசூரில் தனியார் நிறுவன ஊழியர்களை கத்தி முனையில் மிரட்டி பணம், செல்போன்களை கொள்ளையடித்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஓசூரில் துணிகரம்: தனியார் நிறுவன ஊழியர்களை கத்தி முனையில் மிரட்டி பணம், செல்போன் கொள்ளை
Published on

ஓசூர்:

தனியார் நிறுவனம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பத்தலப்பள்ளியில் தனியார் நிறுவனம் ஒன்று உள்ளது. இந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மதுரையில் அமைந்துள்ளது.

ஓசூரில் அமைந்துள்ள நிறுவனத்தில் ஆட்டோ மொபைல் தொடர்பாக உதிரிபாகங்கள் தயாரித்து ஓசூரில் உள்ள பிரபல வாகன தயாரிப்பு நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

ஓசூரில் உள்ள நிறுவனத்தில் மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா கீழயூரை சேர்ந்த செல்வம் (வயது 27) என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவருடன் மேலும் 5 ஊழியர்கள் தங்கி பணிபுரிந்து வருகிறார்கள்.

நேற்று முன்தினம் அதிகாலை 1 மணி அளவில் இவர்கள் அனைவரும், அலுவலக பகுதியில், அவர்கள் தங்கியிருக்கும் அறையில் இருந்தனர். அப்போது, 2 மர்ம நபர்கள் அந்த அறைக்குள் நுழைந்தனர்.

பணம், செல்போன்கள் கொள்ளை

பின்னர் அந்த மர்மநபர்கள் கத்தி முனையில் செல்வம் மற்றும் ஊழியர்களை மிரட்டி அலுவலகத்தில் வைத்திருந்த ரொக்கம் ரூ.1 லட்சத்து 21 ஆயிரத்து 500 மற்றும் 4 செல்போன்களை கொள்ளையடித்து சென்றனர்.

இது குறித்து செல்வம் ஓசூர் அட்கோ போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து, மர்ம நபர்கள் இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com