

நெல்லை,
திருநெல்வேலி மாநகரம், பேட்டையைச் சேர்ந்த அந்தோனி என்பவரின் மகன் சக்திசுரேஷ் (வயது 23), முத்துமாலை என்பவரின் மகன் இசக்கிராஜா(19) ஆகிய 2 பேரும் நெல்லை மாநகரப் பகுதியில் "கிரைண்டர் ஆப்" மூலம் மிரட்டி பணம் பறித்த வழக்குகளில் சம்பந்தப்பட்டு பொது ஒழுங்கு பராமரிப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபட்டு வந்தனர்.
இதனையடுத்து திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனரின் உத்தரவுப்படி நேற்று மேற்சொன்ன 2 பேரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் தடுப்புக்காவலில் அடைக்கப்பட்டனர்.