கொடைக்கானலில் கடும் குளிர்: பொதுமக்கள் அவதி

எல்நினோ பருவ நிலை மாற்றம் காரணமாக கடுமையான உறைப்பனி ஏற்பட வாய்ப்பு உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கொடைக்கானலில் கடும் குளிர்: பொதுமக்கள் அவதி
Published on: 

கொடைக்கானல்,

சர்வதேச சுற்றுலா தலமான கொடைக்கானலில் தென்மேற்கு பருவமழை அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் பெய்வது வழக்கம். ஆனால் இந்தாண்டு போதிய மழை பெய்யாத காரணத்தால் வழக்கமாக டிசம்பர் மாதம் தொடங்க வேண்டிய குளிர் கால சீசன் முன்னதாகவே தொடங்கியுள்ளது. தற்போது அதிகாலை நேரங்களில் புல்வெளிகள் மற்றும் செடிகளில் கடுமையான நீர்ப்பனி காணப்பட்டது. இதன் காரணமாக இரவு நேரங்களில் கடும் குளிர் நிலவி வந்தது.

இந்தநிலையில் நேற்று பகல் நேரத்திலும் கடும் குளிர் நிலவியதால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இதன் காரணமாக சாலைகளில் பொதுமக்களின் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்பட்டது. பலரும் பகல் நேரத்திலேயே குளிருக்கு இதமான ஆடைகளை அணிந்தபடி சென்றதை காணமுடிந்தது. இருப்பினும் வரும் நாட்களில் மழைப்பொழிவு இருந்தால் குளிரின் தாக்கம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் டிசம்பர் மாதத்தில் எல்நினோ பருவ நிலை மாற்றம் காரணமாக கடுமையான உறைப்பனி ஏற்பட வாய்ப்பு உள்ளது என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் கொடைக்கானல் பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

X