கண்தான விழிப்புணர்வு முகாம்

ஐன்ஸ்டீன் கல்லூரியில் கண்தான விழிப்புணர்வு முகாம் நடந்தது.
கண்தான விழிப்புணர்வு முகாம்
Published on

ஆலங்குளம்:

ஐன்ஸ்டீன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களுக்காக கண்தான விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கல்லூரியின் செஞ்சுருள் கழகம், இளைஞர் செஞ்சிலுவை கழகம், நாட்டு நலப்பணி திட்டம், பாவூர்சத்திரம் அரிமா சங்கம் மற்றும் சிவகாசி பிரைட் விஷன் சாரிடபிள் டிரஸ்ட் ஆகியோர் இணைந்து நடத்திய இந்த முகாமிற்கு கல்லூரியின் செயலாளர் எழில்வாணன் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் முருகேசன் முன்னிலை வகித்தார். டிரஸ்ட் நிறுவனர் கணேஷ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.

முகாமில் கண் தானம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கேள்வி கேட்ட மாணவர்களுக்கு அவர்களை ஊக்குவிக்கும் விதமாக பரிசுகள் வழங்கப்பட்டது. முகாமில் பாவூர்சத்திரம் அரிமா சங்க நிர்வாகிகள் கே.ஆர்.பி.இளங்கோ, பரமசிவன், தங்கராஜ், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். செஞ்சுருள் கழக ஒருங்கிணைப்பாளர் குமரன் நன்றி கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com