கோவையில் `முகக்கவசம்' கட்டாயம்... வெளியான அதிரடி அறிவிப்பு..!!

பொதுவெளியில் செல்லும் போது முகக்கவசம் அணிந்து கொள்ள மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கேவை,

கோவையில் புளு வைரஸ் காய்ச்சல் பரவல் அதிகரிப்பு எதிரெலியால், பொது வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும் என்று பெதுமக்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.

காய்ச்சல், உடல் வலி, மூக்கில் நீர் வடிதல், தலைவலி, இருமல் ஆகியவை வைரஸ் பாதிப்பின் அறிகுறிகளாக கூறப்படுகிறது. காய்ச்சல் அதிக பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் மருத்துவ முகாம் ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

முன்னதாக கோவை மாவட்டத்தில் புளூ வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதன் காரணமாக அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்நோயாளியாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com