பத்திரப்பதிவுக்கு ஆன்லைனில் 'டோக்கன்' பெற வசதி அறிமுகம்

பொது மக்கள் இந்த நுழைவில் அடிப்படை தகவல்கள் அளித்து தங்கள் பெயரில் ‘லாக் இன், பாஸ்வேர்ட்’ உருவாக்க வேண்டும்.
பத்திரப்பதிவுக்கு ஆன்லைனில் 'டோக்கன்' பெற வசதி அறிமுகம்
Published on: 

சென்னை,

தமிழகத்தில் பத்திரப்பதிவு பணிகள், ‘ஆன்லைன்’ முறைக்கு மாற்றப்பட்டு வருகின்றன. இதற்கு ஆவண எழுத்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சார் பதிவாளர் அலுவலம்

முன்னதாக பதிவுத்துறை வெளியிட்டிருந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்ததாவது:-

தமிழகத்தில் வீடு, மனை வாங்குவோர் அதற்கான பத்திரங்களை தயாரிக்க சார் பதிவாளர் அலுவலகத்தில் பத்திரங்கள் தாக்கல் செய்வதை தாங்களே மேற்கொள்ளலாம். ஆவண எழுத்தர்களுக்காக காத்திருக்காமல் பொது மக்கள் இந்த பணிகளை நேரடியாக மேற்கொள்ளலாம்.

தகவல்கள் உள்ளீடு

பதிவுத்துறையின் www.tnreginet.gov.in என்ற இணையதளத்தில் குடி மக்களுக்கான நுழைவு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொது மக்கள் இந்த நுழைவில் அடிப்படை தகவல்கள் அளித்து தங்கள் பெயரில் ‘லாக் இன், பாஸ்வேர்ட்’ உருவாக்க வேண்டும்.

இதையடுத்து பதிவு செய்ய வேண்டிய ஆவண வகையை தேர்வு செய்து அடுத்தடுத்து நான்கு நிலைகளில் தேவையான தகவல்களை உள்ளீடு செய்தால் போதும்.

அடையாள எண்

பதிவுக்கு ஏற்ற வரைவு பத்திரம் தயாராகி விடும். இதன் அடுத்த கட்டங்களில் இணையதளத்தில் தேவையான விபரங்களை அளித்தால் அடையாள எண் உருவாகும். அதைத் தொடர்ந்து அடுத்த கட்டத்தில் பத்திரப்பதிவுக்கான நாள், நேரம் ஒதுக்கி ‘டோக்கன்’ ஆன்லைன் முறையில் கிடைத்துவிடும். இதை எடுத்துக் கொண்டு சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் அலுவலகத்துக்கு நேரில் சென்றால் பத்திரப்பதிவு செய்யலாம்.

இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

X