

ஈரோடு,
ஈரோடு மாவட்டம் கொளப்பலூரில் 106 கோடியே 58 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் 81 ஏக்கர் நிலப்பரப்பில் பின்னலாடை தொழிற்பூங்காவின் முதல் தொழிற்சாலை புதிதாக அமைக்கப்பட்டது. இதனை அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் கருப்பணன் இன்று திறந்து வைத்தனர்.
இதன்பின் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், முதல்கட்டமாக இந்த தொழிற்சாலையில் ஏழு ஆயிரம் பேர் வேலைக்கு அமர்த்தப்பட உள்ளதாக தெரிவித்தார். கரிசல் காடாக உள்ள இப்பகுதி இரண்டு ஆண்டுகளில் மிகப்பெரிய தொழில் நகரமாக மாறும் என்று அமைச்சர் கருப்பணன் தெரிவித்தார்.