முந்திரி தோப்பில் தொழிற்சாலை ஊழியர் தற்கொலை

கடலூர் முதுநகர் அருகே முந்திரி தோப்பில் தொழிற்சாலை ஊழியர் தற்கொலை செய்து கொண்டார். அவர், தனது சட்டையை கயிறுபோல் மாற்றி தூக்குப்போட்டுக்கொண்டார்.
முந்திரி தோப்பில் தொழிற்சாலை ஊழியர் தற்கொலை
Published on

கடலூர் முதுநகர், 

கடலூர் முதுநகர் அருகே உள்ள கோசத்திரம் நடுக்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் ராஜேஷ்(வயது 25). பி.எஸ்சி. வேதியியல் பட்டதாரியான இவர், கடந்த 3 ஆண்டாக கடலூர் சிப்காட்டில் உள்ள ஓரு தனியார் ரசாயன தொழிற்சாலையில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் ராசாபேட்டை பகுதியில் உள்ள ஒரு முந்திரி தோப்பில் ராஜேஷ், தூக்கில் பிணமாக தொங்கினார். இது பற்றி தகவல் அறிந்ததும் கடலூர் துறைமுக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அங்கு ராஜேஷ், தனது சட்டையை கழற்றி கயிறுபோல் மாற்றி, முந்திரி மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

போலீசார் விசாரணை

இதனை தொடர்ந்து ராஜேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜேஷ் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com