நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர் கைது

நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர் கைது செய்யப்பட்டார்
நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தவர் கைது
Published on

நெல்லை மாவட்டம் களக்காடு மூங்கிலடி வடக்கு தெருவை சேர்ந்தவர் விக்டர் பொன்ராஜ் (வயது 55). இவரை கடந்த 2012-ம் ஆண்டு களக்காடு போலீசார் திருட்டு வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில் அவர் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்தார். இதனையடுத்து நீதிமன்றத்தில் அவருக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில் களக்காடு போலீசார், விக்டர் பொன்ராஜை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பிடியாணையை நிறைவேற்றினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com