போலி டாக்டர் கைது

சோளிங்கர் அருகே போலி டாக்டர் கைது செய்யப்பட்டார்.
போலி டாக்டர் கைது
Published on

சோளிங்கரை அடுத்த பரவத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (வயது 45). இவர் பட்டப்படிப்பு படித்துவிட்டு வீட்டில் ஆங்கில மருத்துவம் பார்த்து வந்ததாக மாவட்ட கலெக்டர் வளர்மதிக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் சோளிங்கர் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் கருணாகரன் தலைமையில் மருத்துவக் குழுவினர் மற்றும் வருவாய்த் துறையினர் சென்று முருகன் வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.

அதில் அவர் ஆங்கில மருத்துவம் பார்த்ததற்கான ஆதாரங்கள் சிக்கியது. அவரிடம் இருந்து மருந்து பொருட்கள் பறிமுதல் டெப்பட்டது. மேலும் மருத்துவ அலுவலர் கொடுத்த புகாரின்பேரில் சோளிங்கர் போலீசார் வழக்குப் பதிவு செய்து முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com