தமிழ்நாடு போலீஸ் பெயரில் முகநூல்; வாலிபர் கைது

தமிழ்நாடு போலீஸ் பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தமிழ்நாடு போலீஸ் பெயரில் முகநூல்; வாலிபர் கைது
Published on: 

விருதுநகர் மாவட்ட சைபர் கிரைம் போலீசார், சமூக வலைத்தளங்களை கண்காணித்து வருகின்றனர். அப்போது, தமிழ்நாடு போலீஸ் என்ற முகநூல் பக்கம் (பேஸ்புக்) போலீஸ் முத்திரையுடன் இருப்பதை கண்டனர்.

மேலும் இந்த முகநூல் பக்கத்தில் 46 ஆயிரம் பேர் இணைந்து உள்ளனர். அதனை ஆய்வு செய்தபோது இந்த முகநூல் பக்கத்தில் தவறான தகவல்களை பதிவிடுவதும், அரசியல் தலைவர்களை விமர்சித்து தகவல்கள் பதிவிடுவதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த முகநூல் பக்கத்தை, திருத்தங்கல்லை சேர்ந்த தமிழ்செல்வன்(வயது 29) என்பவர் தொடங்கியதும், பட்டதாரியான அவர் திருத்தங்கல்லில் கட்டிட ஒப்பந்ததாரராக இருப்பதும் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து சைபர்கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழ்செல்வனை கைது செய்தனர். 

X

Daily Thanthi
www.dailythanthi.com