மாணவனை கொன்றுவிட்டு சாமியார் வேடம்... மொட்டை அடித்து பதுங்கிய கள்ளக்காதலன் கைது

திருமணம் செய்து கொள்ளாமலே ஒரே வீட்டில் இருவரும் கணவன்-மனைவி போல் வசித்து வந்தனர்.
கைது
Published on: 

கோயம்பேடு,

சென்னை கோயம்பேடு நியூ காலனி பகுதியைச் சேர்ந்தவர் பூவரசி (வயது 28). கணவரை பிரிந்து தனது 9 வயது மகன் தருணுடன் வசித்து வந்தார். தருண், அதே பகுதியில் உள்ள பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். இதற்கிடையில் பூவரசிக்கு, தமிழ்ச்செல்வன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது. திருமணம் செய்து கொள்ளாமலே ஒரே வீட்டில் இருவரும் கணவன்-மனைவி போல் வசித்து வந்தனர்.

கோயம்பேடு போலீசார்

கடந்த மாதம் கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு பூவரசியும், தமிழ்ச்செல்வனும் சென்றபோது, அங்கிருந்த பெண்கள் தமிழ்ச்செல்வனை ஆபாசமாக திட்டியதாகவும், அதை பூவரசி தட்டிக்கேட்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தமிழ்ச்செல்வன், வீட்டுக்குச் சென்று அங்கிருந்த கள்ளக்காதலியின் மகன் தருணின் கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின்னர் செல்போன் மூலம் பூவரசியிடம் தகவல் தெரிவித்துவிட்டு தப்பிச் சென்றார். இதுகுறித்து கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழ்ச்செல்வனை தேடி வந்தனர்.

இந்தநிலையில் திருவண்ணாமலையில் தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம் சிக்காமல் இருக்க தலையை மொட்டை அடித்துக்கொண்டு சாமியார் வேடத்தில் சுற்றித்திரிந்தது விசாரணையில் தெரியவந்தது.

X

Daily Thanthi
www.dailythanthi.com