

சென்னை,
சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து கடந்த 5-ந்தேதி எக்ஸ்பிரஸ் ரெயில் ஒன்று உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா ரெயில் நிலையத்தை சென்றடைந்தது. அப்போது ரெயிலின் கடைசி பெட்டியில் யாரும் உரிமை கோராத சிவப்பு நிற சூட்கேஸ் ஒன்று கிடந்தது. போலீசார் அதை சந்தேகத்தின் பேரில் திறந்து பார்த்தனர். அப்போது உள்ளே தலை இல்லாத மனித எலும்புக்கூடுகள் மற்றும் சில உடல் உறுப்புகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து போலீசார் எலும்புக்கூடு கள் மற்றும் உடல் உறுப்புகளை கைப்பற்றி தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அவை யாருடையது? எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.
இதன் ஒரு பகுதியாக ஆக்ரா போலீசார் சென்னை சென்டிரல் ரெயில் நிலையத் தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது ஒரு ஆணும், பெண்ணும் சேர்ந்து சிவப்பு நிற சூட்கேஸ் ஒன்றை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து ஆக்ரா செல்லும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலின் பின்புற பெட்டியில் ஏற்றிவிட்டு இறங்கிச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.
இதையடுத்து அவர்கள் யார்? எங்கிருந்து வந்தனர்? என்பது குறித்து பல்வேறு ரெயில் நிலையங்களில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது சிவப்பு நிற சூட்கேசை ரெயிலில் ஏற்றியவர்கள் கூடுவாஞ்சேரி ரெயில் நிலையத்தில் இறங்கி சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்த தகவலின்பேரில் கூடுவாஞ்சேரி போலீசார் கூடுவாஞ்சேரி ரெயில் நிலையம் அருகே பல்வேறு பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அப் போது அந்த இருவரும் கூடுவாஞ்சேரி மசூதி தெருவில் உள்ள ஒரு வீட்டுக்கு சென்றது தெரியவந்தது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் பூட்டப்பட்டு இருந்த அந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று சோதனை நடத்தினர்.
அப்போது வீட்டுக்குள் பிரியாணி தயாரிக்க பயன்படுத் தப்படும் பெரிய அண்டா பாத்திரம் ஒன்று சிவப்பு நிற துணியால் மூடப்பட்டிருந்தது. மேலும் வீட்டுக்குள் கடுமையான துர்நாற்றம் வீசியது. அந்த பாத்திரத்தை திறந்து பார்த்தபோது அதற்குள் மனித உடலின் சதைப்பகுதிகள் துண்டு துண்டாக வெட்டப்பட்ட நிலையில் இருந்தன. அந்த சதைப்பகுதிகளில் மைதா மாவு கலக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், மனித சதைப்பகுதிகளை அண்டாவுடன் கைப்பற்றி தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே ஆக்ரா ரெயில் நிலையத்தில் கைப்பற்றப்பட்ட மனித எலும்புகள் மற்றும் உடல் உறுப்புகளும், கூடுவாஞ்சேரி வீட்டில் கைப்பற்றப்பட்ட மனித சதைப்பகுதிகளும் ஒரே நபருடையதா? என்பது குறித்து தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் ஒரே நபருடையது என்பது உறுதி யானது. தொடர் விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஹயாத் நிஷா (வயது 38) என்பது தெரியவந்தது.
இவர் சென்னை தாம்பரம் அருகே உள்ள தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு 19 வயதில் ஒரு மகனும் உள்ளார். அவர் தாம்பரத் தில் ஏ.சி. மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். அவரி டம் நடத்தப்பட்ட விசாரணையில் 'தனது தாயார் ஒருவருடன் தகாத உறவில் இருந்ததால் நான் தனியாக தங்கி வேலை செய்து வருகிறேன்' என கூறியுள்ளார்.
இதையடுத்து கூடுவாஞ்சேரி போலீசார் ஹயாத் நிஷாவுடன் கள்ளத்தொடர்பில் இருந்த நபர் யார்? என விசாரணையை தீவிரப்படுத்தினர். அதில், ஹயாத் நிஷா தங்கி இருந்த வீட் டில் கடந்த 2 மாதங்களாக தம்பதிகளான அசாம் மாநிலத்தை சேர்ந்த மணிக்உத்தீன் லஸ்கர் (22) என்பவரும், ஒடிசா மாநி லத்தை சேர்ந்த பகவதி மாஜி என்பவரும் தங்கி இருந்தது தெரியவந்தது.
இதனால் போலீசாரின் சந்தேகம் அந்த தம்பதி யினர் மீது திரும்பியது. ஹயாத் நிஷாவை கொலை செய்து விட்டு இருவரும் தங்களது சொந்த ஊர்களான அசாம் அல்லது ஒடிசாவுக்கு தப்பிச் சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். இதையடுத்து கூடுவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் தலைமையில் தனிப்படை போலீசார் அசாம் மாநிலத்திற்கு விரைந்து சென்றனர்.
ஒரு வாரத்துக்கும் மேலாக போலீசார் அவர்களை தேடி வந்த நிலையில், அவர்கள் மணிப்பூர் மாநிலம் ஜிரிபாம் மாவட்டத்தில் உள்ள காசிம்பூர் பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் மணிப்பூர் போலீசாரின் உதவியுடன் காசிம்பூர் பகுதிக்குச் சென்று அங்கு பதுங்கி யிருந்த மணிக்உத்தீன் லஸ்கர் மற்றும் பகவதி மாஜி ஆகிய இருவரையும் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
தற்போது கைதான இருவரையும் தமிழகத்திற்கு அழைத்து வருவதற்காக நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.மேலும் கைது செய்யப்பட்டுள்ள தம்பதியினரை சம்பந்தப்பட்ட இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தவும், அவர்கள் கொலை செய்த விதம் குறித்து விசாரிக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். அவர்களிடம் நடத்தப்படும் தொடர் விசாரணைக்குப் பிறகே இந்த கொலையின் முழுமையான பின்னணி குறித்து தெரியவரும்.