கடமலை-மயிலை ஒன்றியத்தில் தேங்காய் விலை வீழ்ச்சி

கடமலை-மயிலை ஒன்றியத்தில் தேங்காய் விலை வீழ்ச்சியடைந்தது.
கடமலை-மயிலை ஒன்றியத்தில் தேங்காய் விலை வீழ்ச்சி
Published on

கடமலை-மயிலை ஒன்றியத்தில் ஏராளமான தென்னந்தோப்புகள் உள்ளன. இங்கு விளையும் தேங்காய்கள் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்தநிலையில் கடமலை-மயிலை ஒன்றியத்தில் தேங்காய் விளைச்சல் அதிகரித்துள்ளது. ஆனால் அவற்றின் விலை குறைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஒரு டன் தேங்காய் ரூ.24 ஆயிரத்துக்கும், ஒரு தேங்காய் ரூ.11-க்கும் விற்பனை ஆனது. தற்போது ஒரு டன்னுக்கு ரூ.2 ஆயிரம் குறைந்து ரூ.22 ஆயிரத்துக்கும், ஒரு தேங்காய் ரூ.9-க்கும் விற்பனையாகிறது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், "தேங்காய் விளைச்சல் அதிகரித்ததால் மகிழ்ச்சி அடைந்தோம். ஆனால் அது நிலைக்கவில்லை. தேங்காய் விலை வரலாறு காணாத அளவில் வீழ்ச்சி அடைந்துள்ளது. விலை மேலும் குறையும் வாய்ப்பு உள்ளது. தேங்காய் எண்ணெய் உற்பத்தி குறைவு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு அதிக அளவில் இறக்குமதி செய்யப்படுவது தேங்காய் விலை வீழ்ச்சிக்கு காரணமாகும். இதனால் தென்னை விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே விவசாயிகளுக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்க வேண்டும். வெளிமாநில இறக்குமதியை கட்டுப்படுத்தி தேங்காய்க்கு நிலையான விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com