மாடியிலிருந்து தவறி விழுந்துகட்டிட தொழிலாளி சாவு

மணப்பாட்டில் மாடியிலிருந்து தவறி விழுந்து கட்டிட தொழிலாளி இறந்து போனார்.
மாடியிலிருந்து தவறி விழுந்துகட்டிட தொழிலாளி சாவு
Published on

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் அருகிலுள்ள மணப்பாடு சபாபதிபுரத்தை சேர்ந்த வின்சென்ட் மகன் ராஜன் (வயது 48). கட்டிட தொழிலாளி. இவர், சம்பவத்தன்று இரவு சாப்பிட்டுவிட்டு மாடிக்கு படுக்கசென்று உள்ளார். மனைவி, குழந்தைகள் கீழ்தளத்திலுள்ள அறையில் தூங்கியுள்ளனர். மறுநாள் காலையில் அவரது மனைவி சாந்தி கண்விழித்து பார்த்தபோது, மாடிப்படி அருகில் ரத்த வெள்ளத்தில் ராஜன் இறந்து கிடந்துள்ளார். இதுகுறித்து அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரெகுராஜ்ன், சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், அவர் நள்ளிரவில் மாடியிலிருந்து கீழே இறங்கி வந்தபோது தடுமாறி கீழே விழுந்து இறந்து இருப்பதாக தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com