

குழித்துறை,
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே குளக்கச்சி பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ்(வயது 34 ) கொத்னார். இவரது மனைவி கார்த்திகா( 21) இவர்களுக்கு சஞ்சனா (3) சரண்(1 ) என்ற குழந்தை உள்ளது.
இந்நிலையில் வீட்டில் விளையாடி கொண்டிருந்த குழந்தை சரண் திடீரென எலி பேஸ்ட் சாப்பிட்டு மயக்கமடைந்ததாக தாய் கார்த்திகா கூலி வேலைக்கு சென்றிருந்த தனது கணவர் ஜெகதீஷ்க்கு தகவலளித்துள்ளார்.
இதையடுத்து வீட்டிற்கு வந்த ஜெகதீஷ் குழந்தை சரணை மார்த்தாண்டம் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
இதையடுத்து குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தை உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மார்த்தாண்டம் போலீசார் குழந்தை சரணின் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்கு ஆசாரிபள்ளம் மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது குழந்தை இறப்பில் உள்ள சந்தேகத்தை உறுதி செய்த போலீசார், தாய்-தந்தையை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது பல உண்மைகள் வெளிவந்து உள்ளது.
இது தொடர்பாக போலீசார் கூறுகையில்,
குழந்தையின் இறப்பில் உள்ள சந்தேகம் தொடர்பாக தாய் கார்த்திகா மற்றும் தந்தை ஜெகதீசனிம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் கார்த்திகாவுக்கு செல்போனில் வந்த சென்ற அழைப்புகள் அழிக்கபட்டிருந்தது. இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த செல்போன் எண் வாலிபர் ஒருவரின் உடையது என்பது தெரியவந்து. இதில் மாரயபுரம் பகுதியை சேர்ந்த காய்கறி கடை நடத்தும் வாலிபரிடம் கார்த்திகா அதிகநேரம் பேசி உள்ளார்.
இதில் தொடர்புடைய வாலிபர் சுனில் என்பரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர் . அப்போது
கார்திகாவிற்கு திருமணமாகி குழந்தை இருப்பது தெரியாமல் பழகியதாகவும் அந்த தகவலை தெரிந்ததும் பேசுவதை நிறுத்தியதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் சுனில் மீது இருந்த காதலில் முழ்கிய கார்த்திகா தனது இரண்டு குழந்தைகளை கொன்றால் தன்னை ஏற்றுகொள்வான் என்று நினைத்து இரண்டு குழந்தைகளுக்கு சேமியா உப்புமாவில் எலி பேஸ்ட் கலந்து கொடுத்த உள்ளார். இதில் குழந்தை சரண் உயிரிழந்த நிலையில், சஞ்சனா உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.