குடும்பத் தகராறால் விபரீதம்; விஷம் கொடுத்து 8 மாத குழந்தை கொலை

கணவன், மனைவி இடையே அவ்வப்போது குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
குடும்பத் தகராறால் விபரீதம்; விஷம் கொடுத்து 8 மாத குழந்தை கொலை
Published on

மதுரை,

மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள அலங்கம்பட்டியை சேர்ந்தவர் வாசு என்ற அடைக்கன். எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி புனிதா (வயது 22). இவர்களுடைய 8 மாத பெண் குழந்தை ரியா. இந்தநிலையில் கணவன், மனைவி இடையே அவ்வப்போது குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. 3 நாட்களுக்கு முன்பும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் மனவருத்தம் அடைந்த புனிதா, தற்கொலை செய்துகொள்ளும் விபரீத முடிவு எடுத்துள்ளார்.

தீவிர சிகிச்சை

சம்பவத்தன்று புனிதா, தனது 8 மாத குழந்தைக்கு விஷம் கொடுத்தார். அவரும் குடித்துள்ளார். சிறிது நேரத்தில் இருவரும் வாயில் நுரைதள்ளி மயங்கி கிடந்தனர். இதற்கிடையே உறவினர்கள் இதை கவனித்து இருவரையும் மீட்டு உடனடியாக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி குழந்தை ரியா பரிதாபமாக இறந்தது. தாய் புனிதாவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com