குடும்பப் பிரச்சினை: தூங்கிக்கொண்டிருந்த கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த பெண்

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடும்பப் பிரச்சினை: தூங்கிக்கொண்டிருந்த கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த பெண்
Published on: 

திருச்சி,

குடும்பப் பிரச்சினை காரணமாக தூங்கிக்கொண்டிருந்த கணவனின் தலையில் அம்மிக்கல்லை போட்டுக் மனைவி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

குடும்பப் பிரச்சினை

திருச்சி விமான நிலையம் அருகே உள்ள அண்ணா நகர் பகுதியில் , குடும்பப் பிரச்சினை காரணமாக இரவு நேரத்தில் தூங்கிட்டு இருந்த கணவரின் தலையில் அம்மிக்கல்லைப் போட்டு அவரது மனைவி கொலை செய்தார். கூலி தொழிலாளியான செந்தில்குமார் (50) மதுப்பழக்கத்துக்கு அடிமையானதால், அவருக்கும் மனைவி கலாராணிக்கும் (42) இடையே அடிக்கடி தகராறு நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது.

சம்பவம் நடந்த நேற்று இரவு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில, செந்தில்குமார் தூங்கிய பிறகு வீட்டிலிருந்த அம்மிக்கல்லை தூக்கி அவரது தலையில் போட்டு கலாராணி கொலை செய்தார்.

தீவிர விசாரணை

தகவலறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தநிலையில், மனைவி கலாராணியை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இரண்டு சிறுவர்கள் உள்ள குடும்பத்தில் நடந்த இந்த பயங்கர சம்பவம் திருச்சியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

X